சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்...! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியது எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அந்தவகையில், வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் உள்ள இருவலயங்களில் இருந்தும் இம்முறை 4396 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
அவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 2405 பேரும், தனியார் பரீட்சார்த்திகள் 1991 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
இம்முறை பரீட்சைக்காக வவுனியாவில் 40 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குறித்த பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் இம்முறை தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாடாளாவிய ரீதியில் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17.03.2024) ஆரம்பமாக உள்ளது.
பரீட்சை எழுதுபவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர (Amit Jayasundara) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை
அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையை தேர்வுக்கு எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் தேர்வு எழுதும் ஒவ்வொரு வினாத்தாளுக்கும் உங்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
நுழைவுச் சீட்டு பரீட்சையின் முதல் நாளே சேகரிக்கப்படும். அது உங்களிடம் திருப்பித் தரப்படாது.
கூடுதலாக, தேர்வு எழுத பேனாக்கள் மற்றும் பென்சில்களை தேர்வு மையத்திற்கு கொண்டு வரலாம்.
வேறு எதையும் கொண்டு வர முடியாது. தேவைப்பட்டால், தண்ணீர் போத்தல்கள் கொண்டு வரலாம்.
சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு
குறிப்பாக, தேர்வுக்கு எடுத்துச் செல்வதற்கு முற்றிலும் தடைசெய்யப்பட்ட விடயங்களான போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் அல்லது வேறு எதையும் கொண்டு வர வேண்டாம், தேர்வு எழுதுபவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருமாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியாக 3,663 மையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சைக்கு 398,182 பள்ளி விண்ணப்பதாரர்களும் 75,965 தனியார் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்