W1 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு விவகாரம்: நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Deshabandu Tennakoon
By Sindu
முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மாத்தறையில் உள்ள W1 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து உள்ளிட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு அமைய அவர் இன்று (07) முன்னிலையாகியுள்ளார்.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்குறித்த எட்டு பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க மாத்தறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மத்தறை மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்