தேசபந்து தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் தீவிர முடிவு!
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.
முகத்துவாரம் (Modara) பகுதியில் இன்று (09.03.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்கள் பறிமுதல்
இதன்படி, தேசபந்து தென்னகோன், தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தலைமறைவாகியுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியேட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்