தேசபந்துவின் ரிட் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தாக்கல் செய்த ரிட் மனுவின் பரிசீலனை நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை (Matara) நீதிமன்றத்தால் தன்னைக் கைது செய்யவதற்கு பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்யக் கோரி தேசபந்து தென்னகோன் குறித்த மனுவை தாக்கல் செய்தார்.
அதன்படி, குறித்த மனு இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal of Sri Lanka) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தீர்ப்பை எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) அறிவித்தது.
காவல்துறை விசாரணை
தேசபந்து தென்னகோன் தனது சட்ட பிரதிநிதிகள் மூலம் குறித்த மனுவை சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன (Ravi Seneviratne) மற்றும் முன்னாள் சி.ஐ.டி இயக்குநர் எஸ்.எஸ்.பி ஷானி அபேசேகர (Shani Abeysekara) ஆகியோரின் செல்வாக்கின் கீழ் தனது கைது மேற்கொள்ளப்படுவதாக தென்னகோன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது தலைமறைவாக உள்ள தேசபந்துவைக் கண்டுபிடிப்பதற்கான காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You May like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்