வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது - ரவிகரன் குற்றச்சாட்டு

Sri Lanka
By pavan Aug 01, 2023 11:00 AM GMT
Report

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

மகாவலி எல் என்னும் பெயரில் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதாக மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து களவிஜயம் செய்ததன் பின்னர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அக்கரவெளி எனும் பகுதி அதற்கு அருகில் மணற்கேணி என்ற இடம் அப்பகுதியிலும் காணிகள் அபகரிப்பு நடைபெறுவதாக ஏற்கனவே சுட்டிகாட்டியிருந்தோம்.

சிங்கள குடியேற்றங்கள் 

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது - ரவிகரன் குற்றச்சாட்டு | Destroying The Livelihood Ravikaran Allegation

தற்போது அக்கரவெளி பகுதியில் தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பூர்விக காணிகளை மக்கள் சென்று பார்த்த போது வன இலாகாவினுடைய பொறுப்பில் இருந்த காணிகள் மகாவலிக்கு விடுவித்து கொடுத்திருக்கிறார்கள்.

11 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் படி வழங்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி போன்ற ஆறு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஏற்கனவே மகாவலி எல் திணைக்களமானது, மக்களிடம் எத்தனை ஏக்கர் இருந்தாலும் இரண்டு ஏக்கர் வீதம் தான் தரமுடியும் என கூறிய போது தங்களுடைய காணிகள் தங்களுக்கே வேண்டும் என விட்டுக் கொடுக்காது இருந்தார்கள்.

இவ்வாறு இருக்கும் போது தமிழர்களுடைய பூர்வீக காணிகள், வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட காணிகள் எங்களுக்கோ, மாவட்ட செயலகத்திற்கோ , பிரதேச செயலகத்திற்கோ தெரியாமல் மகாவலி எல் என்ற அதிகார சபையின் ஊடாக கொழும்பில் உள்ள சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாயின் இதனை யாரிடம் முறையிடுவது. மக்கள் வாழ்வாதாரத்திற்காக எங்கு சென்று முட்டிக்கொள்வது.

போராட்டம்

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது - ரவிகரன் குற்றச்சாட்டு | Destroying The Livelihood Ravikaran Allegation

இவ்வாறு கொடுமையான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை இலகுவான முறையில் வனவள திணைக்களமானது மாகவலிக்கு விடுவித்து கொடுத்திருக்கின்றது.

மகாவலிக்கு விடுவித்து எங்கோ இருக்கின்ற சிங்கள மக்களுக்கு கொடுக்கின்றது. எங்களுக்கு அருகாமையிலுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 1500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் வனவளத்திணைக்களத்திடம் இருந்து பெற்று சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்வதாக மக்களாலும், அதிகாரிகளாலும் அறியக்கூடியதாக உள்ளது.

சொந்த காணிகளில் விவசாயம் செய்ய முடியாத வகையில் இலங்கை அரசாங்கமானது தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கோடும் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடும் செயற்பட்டு கொண்டு வருகின்றது என்பதனை சுட்டி காட்டுகின்றோம்.

இதற்கான சரியான தகவல் கிடைத்ததும் ஒரு போராட்டத்தை மேற்கொள்வோம் என்பதை கூறிக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.


ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025