பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் மீது சைபர் தாக்குதல்: சீன அரசு மீது திரும்பும் சந்தேக பார்வை
பிரித்தானிய இராணுவ உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை சைபர்(Cyber) தாக்குதல் மூலம் திருடப்பட்டதை அவதானித்ததாக பிரித்தானியா அறிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதல்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை பிரித்தானியா குறிப்பிடவில்லை என்றாலும் முக்கிய சந்தேக நபராக சீன அரசு இருப்பதாக பிரித்தானியா நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சகம் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு ஊதிய முறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சீன சைபர் தாக்குதலுக்கான அனைத்து அடையாளங்களும் இதில் இருப்பதாகவும் முன்னாள் இராணுவ வீரரும் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான டோபியாஸ் எல்வுட்(Tobias Ellwood) அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேவை பணியாளர்கள்
அத்தோடு ஊதிய முறையின் பெயர்கள் மற்றும் சேவை பணியாளர்களின் வங்கி விவரங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலை மற்றும் ஓய்வூதிய அமைச்சர் மெல் ஸ்ட்ரைட்(Mel Stride) அரசாங்கத்தின் சார்பாக இத்தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சைபர் தாக்குதல்
இதனுடன் பெயர்கள், வங்கி விவரங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சேவையில் உள்ள மற்றும் முன்னாள் ஆயுதப்படை உறுப்பினர்களின் தனிப்பட்ட முகவரிகள் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேலும் இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் முட்டாள்தனமானதெனவும் அனைத்து வகையான சைபர் தாக்குதல்களையும் சீனா எப்போதும் கடுமையாக எதிர்க்கிறது மற்றும் ஒடுக்குகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்(Lin Jian) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |