மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் குதிப்பு
மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவலை அவர்கள் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து ஊழியர்கள் மேலும் தெரிவிக்கையில், மத்திய தபால் பரிவர்த்தனை ஸ்தாபிக்கப்பட்டுள்ள எட்டு மாடி கட்டிடத்தில் உடைந்த மின்தூக்கியை சீர் செய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த பணிபுறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
பணிபுறக்கணிப்பு
அத்துடன் மத்திய தபால் பரிவர்த்தனையில் பணிபுரியும் பெண்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் கர்ப்பிணித் தாய்மார்கள் என்பதனால் சங்கடமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் லிப்ட் பழுதடைந்து ஒரு வருடமாகியும் அதை சரிசெய்யாததால் கட்டடத்தில் உள்ள தபால் பைகளை நகர்த்துவதற்கு கடும் சிரமப்பட வேண்டியுள்ளதாக ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை மறுசீரமைக்க அரசாங்கம் மூன்று மாத கால அவகாசம் கோரும் நிலையில் ஒரு மாதத்திற்குள் அதனை மறுசீரமைக்கத் தவறினால் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |