சமூகத்தில் புரையோடிப்போன சாதிய பேயை விரட்டுகிறதா “கர்ணன்” படம்?
தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை விட பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்தான் கர்ணன். பரியேறும் பெருமாள் எனும் எதார்த்தமான படைப்பை தந்துவிட்டு, தற்போது கர்ணன் படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். சில எதிர்ப்புகள், பல எதிர்பார்ப்புகள் மத்தியில் கர்ணன் படம் வெளியாகியுள்ளது. கர்ணனாக வரும் தனுஷ், கீழ் சாதி மக்களின் உணர்வுகளை கண்முன் பிரதிபலிக்கிறார்.
அதே போல், கர்ணனுக்கு துணையாக நிற்கும் நடிகர் லால், தனது நடிப்பின் மூலம் கண்கலங்க வைக்கிறார்.
கதாநாயகி ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதேபோல், வில்லனாக வரும் நடிகர் நட்டி, பொலிஸ் அதிகாரியாக படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அலர வைத்திருக்கின்றார்.
படத்தினுடையான முழுமையான விமர்சனம் காணொளியில்,