அதிபர் ஊடகப் பிரிவின் பிரதானியாக தனுஷ்க ராமநாயக்க நியமனம்
Ranil Wickremesinghe
President of Sri lanka
Journalists In Sri Lanka
By Vanan
ஊடகப் பிரிவின் தலைவராக தனுஷ்க ராமநாயக்க
சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக (தலைவராக) ஊடகவியலாளர் தனுஷ்க ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தனுஷ்க ராமநாயக்க, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஊடகச் செயலாளராக முன்னர் கடமையாற்றியுள்ளார்.
அவர் மஹரகம நகரசபை உறுப்பினராகவும் உள்ளார்.
ஊடகப் பணிப்பாளராக ஷனுக கருணாரத்ன
அத்தோடு, அதிபரின் ஊடகப் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷனுக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷனுக கருணாரத்ன இதற்கு முன்னர் ஹிரு தொலைக்காட்சி உட்பட பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
