அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

By Pavi Sep 02, 2026 08:52 AM GMT
Report

யாழ். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (02.09.2026) காலை யாழ்ப்பாணம் தாவடியில் நடைபெற்றது.

1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தாவடி பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்ட அமரர் வி. தர்மலிங்கத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் மேயர்

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் மேயர்

மலரஞ்சலி

நிகழ்வில் அன்னாரின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு | Dharmalingam Observed Today At Thavadi

தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினர்.

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் 1918 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் கந்தரோடையில் விஸ்வநாதர் – சரஸ்வதி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

சிறுவயது முதலே சமூக சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அவர், தனது அரசியல் மற்றும் சமூகப் பணியின் பயணத்தை உள்ளூராட்சி மட்டத்திலிருந்து ஆரம்பித்தார். உடுவில் கிராம சபையின் தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட அவர், ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக அப்பதவியை வகித்தார்.

 மானிப்பாய் தொகுதி

பின்னர் சுன்னாகம் பட்டின சபையின் தலைவராகவும் பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், 1983 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார்.

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு | Dharmalingam Observed Today At Thavadi

தான் போட்டியிட்ட தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று, உடுவில் – மானிப்பாய் தொகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக விளங்கினார்.

தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அமரர் வி. தர்மலிங்கம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஐந்து தடவைகள் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித்த விசமிகள் - சி்.வி.கே.சிவஞானம் கடும் சீற்றம்

யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித்த விசமிகள் - சி்.வி.கே.சிவஞானம் கடும் சீற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026