கசிப்பை ஏற்றுமதி செய்ய கோருகிறார் டயானா கமகே : வருமானம் கொளிக்குமாம்
கசிப்பை ஏற்றுமதி செய்தால் இலங்கைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
3600 ரூபாவிற்கு மதுபான போத்தல் ஒன்றை சாதாரண மக்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுவதால் மாற்று வழியை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், மதுபானத்தின் விலை உயர்வால் கசிப்பு உற்பத்தி 500% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வீட்டில் கசிப்பை குடிக்கும் நிலை
தற்போது பலர் வீட்டில் கசிப்பை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கசிப்பு மற்றும் கஞ்சாவின் மதிப்பை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும், ரஷ்யாவில் கசிப்புக்கு ஓட்கா என்றும் ஜப்பானில் 'சேக்' என்றும் பெயர் உள்ளதாக அவர் கூறினார்.

நல்ல தரத்தில் கசிப்பு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தால், அந்த தொழிலில் இருந்து இந்த நாட்டுக்கு வரும் டொலர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என மேலும் தெரிவித்தார்.