அநுர அமைச்சர்களிடம் சரமாரியாக கேள்விகளை தொடுத்த புலம்பெயர் தமிழர்கள்!
உள்நாட்டுப் போரின் போது இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீளவும் விடுவிப்பது தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நேற்றைய தினம் (26.10.2025) பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களான ஹர்ஷன நாணயக்கார, சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போதே காணி அபகரிப்பு தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது.
காணிகள் விடுவிப்பு
இதன்போது பதிலளித்த நீதியமைச்சர், “எங்களுடைய அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு வருட காலப்பகுதிக்குள் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும், காணிகள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்காக விடுவிக்கப்படவுள்ளன. உங்களுடைய எண்ணங்களை என்னால் புரிந்துக் கொள்ள கூடியதாக உள்ளது.
வடக்கின் அபிவிருத்திக்காக எங்களுடைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டங்களை இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை.
நாடாளுமன்றத்தில் ஒரு சில தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் மக்களை எனது மக்கள் என கூறுகின்றனர், அப்படிக் கூறுவதை நான் விரும்பவில்லை “ நமது மக்கள் ” என்பதையே நான் விரும்புகிறேன்.
தமிழ் மக்களுக்கென தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அவற்றை எங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறது.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்