இந்திய குடியரசு தலைவரை அவமதித்தாரா மோடி..!
பாரத ரத்னா விருது வழங்கும் நிகழ்வில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் மோடியால் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது ஞாயிற்றுக்கிழமை (31) பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது.
புகைப்படத்திற்கு ‘போஸ்’
வயது மூப்பு காரணமாக டியரசு தலைவர் திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை வழங்கி வைத்தார்.
இந்தநிகழ்வில், பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர்ஜெகதீப் தன்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமரும், அத்வானியும் அமர்ந்தநிலையிலும், குடியரசு தலைவர் நின்றுகொண்டும் இருந்தபடி புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், குடியரசு தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு என பல கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |