இந்தியாவின் கைகளுக்கு செல்லும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் : கத்தும் விமல்

Colombo Wimal Weerawansa Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Jul 14, 2025 04:04 AM GMT
Report

ஆட்பதிவுத் திணைக்களம் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (13.07.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.இருப்பினும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடங்கள் செயற்படுத்தப்படவில்லை.

மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் : அதிரடியாக வான்பரப்பை மூடிய ஈரான்

மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் : அதிரடியாக வான்பரப்பை மூடிய ஈரான்

தேசிய அடையாள அட்டை

இதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையை உருவாக்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார்.

இந்தியாவின் கைகளுக்கு செல்லும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் : கத்தும் விமல் | Digital Id Card For Sri Lanka People

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் பிரிவுகளின் நிர்வாக கட்டமைப்பு முறைமையை மாற்றியமைப்பற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குரிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. 

ஆட்பதிவு திணைக்களம் டிஜிட்டல் ஆளடையாள அட்டைக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு, அப்பணிகள் 99 சதவீதமளவில் நிறைவு செய்துள்ளன. 

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் - இளைஞன் பலி

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் - இளைஞன் பலி

ஆட்பதிவு திணைக்களம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டிஜிட்டல் ஆளடையாள அட்டையை செயற்பாட்டு ரீதியில் செயற்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்திருந்தது.

இந்தியாவின் கைகளுக்கு செல்லும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் : கத்தும் விமல் | Digital Id Card For Sri Lanka People

இந்திய கொள்கையுடன் செயற்பட்ட இந்த அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்,இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. 

டிஜிட்டல் முறைமையிலான தேசிய அடையாள அட்டை விநியோகத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் பிரசுரிக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ள நிலையில் தான் இந்த திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இலங்கையில் தனிப்பட்ட தரவு சேகரித்தல் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துக்கான விலைமனுகோரல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த விலைமனுகோரல் இலங்கையில் பிரசுரிக்கப்படவில்லை. 

1948 இலிருந்து நடக்கும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை : கஜேந்திரகுமார் பகிரங்கம்

1948 இலிருந்து நடக்கும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை : கஜேந்திரகுமார் பகிரங்கம்

முறைகேடான செயற்பாடு

இந்தியாவில் தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் பத்திரத்தில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த தனிப்பட்ட தரவுகள் மூன்றாம் தரப்புக்கு கசிந்தால் இந்திய நிறுவனம் 10 சதவீதமளவில் தான் பொறுப்புக்கூறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கைகளுக்கு செல்லும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் : கத்தும் விமல் | Digital Id Card For Sri Lanka People

உலகில் தற்போது தரவு திருட்டு பிரதான மோசடியாக காணப்படுகிறது. ஆட்பதிவுத் திணைக்களம் சுமார் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்.

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தில் சிக்கிய இந்தியாவிலிருந்து வந்த நபர்

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தில் சிக்கிய இந்தியாவிலிருந்து வந்த நபர்

தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வு: லண்டனில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு

தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வு: லண்டனில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026