அதிபர் தேர்தலை நோக்கமாக கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்தார் மகிந்தவின் சகா
இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளரும் தீவிர ராஜபக்ச ஆதரவாளருமான திலித் ஜயவீர அரசியலில் பிரவேசிப்பற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை நோக்கமாக கொண்டு இந்த அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முதன்மையாக கொண்டு நாட்டில் பல அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோட்டாபயவின் உயிர் அச்சம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி..! பிள்ளையான் தரப்பு கூறிய உண்மைகள்
இந்த நிலையில், தாய்நாட்டு மக்கள் கட்சி எனும் புதியதொரு அரசியல் கட்சி சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் கட்சியின் தலைவராக திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளதோடு விமானம் சின்னத்தில் இந்த புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை மீட்டெடுத்தல்
அத்துடன், தாய்நாட்டு மக்கள் கட்சியின் சிரேஷ்ட தலைவராக ஹேமகுமார நாணயக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திலித் ஜயவீரவின் “நோக்கம்“ எனும் அமைப்பும் இந்த அரசியல் கட்சியுடன் இணைந்துள்ளதாக ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தலை முதன்மையாக கொண்டு குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் முன்னணி வர்த்தகராகவும் தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளருமாக செயல்பட்டு வந்த திலித் ஜெயவீர, இலங்கையை மீட்டெடுத்தல் எனும் அமைப்பின் மூலம் கடந்த காலங்களில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.