டைனோசர்கள் குறித்த விஞ்ஞான ஆய்வுகளின் பின்னணி இதுதான்!
இந்த உலகிலிருந்து அழிந்து சுமார் 65 மில்லியன் ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களால் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் ஒரு உயிரினமாக டைனோசர் விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது.
எந்தக்காலப்பகுதியில் டைனோசர்கள் பூமியில் வாழ்ந்தன, எங்கெல்லாம் பரவியிருந்தன, அவற்றின் வகைகள், டைனோசர்களின் உணவுப்பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, அழிவுக்கான காரணம் என டைனோசர்கள் தொடர்பாக பல்வேறுபட்ட ஆய்வுகள் இன்றளவும் நடந்த வண்ணமே உள்ளது.
வேற்றுக்கிரகங்களில் வாழ்வதற்கான சாத்தியம்
இந்நிலையில் இதுவரை மனிதன் வாழும் பூமியில் இருந்து டைனோசர்கள் அழிந்தாலும் அவை வேற்றுக்கிரகங்களில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
டைனோசர்கள் விடயத்தில் விஞ்ஞானிகள் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் பூமி மிகவும் செழிப்பாக பேணப்பட்டது மாத்திரமல்லாமல், புவியில் ஒக்சிஜன் சமநிலையைப் பேணியதோடு, அதிக சதவீதத்தில் வைத்திருந்தமையும் ஒரு முக்கியமான காரணமாகும்.
ஏனென்றால் தற்போது பூமியில் 21% ஆகக் காணப்படும் ஒக்சிஜன் டைனோசர்கள் பூமியில் வாழ்ந்த காலப்பகுதியில் 30% சதவீதமாகக் காணப்பட்டது.
ஒக்சிஜனின் நிலைத்திருப்பு
பூமி இயற்கையுடன் ஒன்றித்ததாய் செழிப்புடன் காணப்பட்டது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆக ஒரு கிரகத்தில் ஒக்சிஜனின் நிலைத்திருப்பை பேணுவதில் டைனோசர்கள் அளப்பரிய பங்கு ஆற்றியுள்ளது என்பதனை விஞ்ஞானிகள் ஆழமாக நம்புகிறார்கள்.
இதனை ஒரு கருதுகோளாகக் கொண்டு வேற்றுக்கிரகங்களில் டைனோசர்களின் நிலைத்திருப்புக்கான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனவே இப்போது பூமியை விட அதிக ஒக்சிஜனைக் கொண்ட கிரகங்களைக் கண்டுபிடித்தால், அதன் மூலம் ஒருவேளை வேறு டைனோசர்கள் வாழ்கின்றதா என்பதைக்கூட கண்டுபிடிக்க வழிகிடைக்கலாம் என கார்னெல் பல்கலைக்கழகத்தின் ரெபேக்கா பெய்ன் தெரிவித்துள்ளார்.
உலகின் சமநிலை மற்றும் ஒக்சிஜனின் நிலைத்திருப்பிற்கு பெரும் பங்காற்றியமையினாலேயே இன்றளவும் விஞ்ஞானிகளால் ஆய்வுக்குற்படும் அதிகளவில் தேடப்படும் உயிரினமாக டைனோசர்கள் விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |