நேரடி மோதல்கள் வெடிக்கும்! ஈரான் விடுத்துள்ள பகிரங்க மிரட்டல்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் தற்போது நிலமை ஓரளவுக்கு அமைதியாகக் காணப்பட்டாலும், அமெரிக்கா மீண்டும் அங்கு நுழைந்து ஈரானியக் கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தால் பிராந்தியத்தில் நேரடி மோதல்கள் வெடிக்கக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் நகர்வுகளைத் தாங்கள் கூர்ந்து கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியப் படைகளுக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அமெரிக்காவின் அமைதித் திட்டம்
இதேவேளை, ஓமான் வளைகுடாவில் அமெரிக்கா விதித்துள்ள கடல்வழித் தடையை மீறி ஈரானியத் துறைமுகத்திற்குள் நுழைய முயன்ற இரண்டு காலி எண்ணெய் டாங்கிகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அமைதித் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வரும் வேளையில், கடல் எல்லையில் நிகழ்ந்து வரும் இத்தகைய மோதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்த்தேசியம் தனிநபர் தோல்விகளால் எடைபோட முடியாத ஓர் இருப்பின் அரசியல்! 16 மணி நேரம் முன்
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம்
4 நாட்கள் முன்