இலங்கை- பிரான்ஸ் இடையே ஆறு தசாப்தத்தின் பின்னர் மீள ஆரம்பமான சேவை!
flight
france
tourist
sri Lanka
By Kalaimathy
இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆறு வருடங்களின் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கைக்கும் பிரான்ஸிற்குமிடையில் இன்று முதல் வாராந்தம் மூன்று விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையிலான நேரடி விமான சேவை 1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்வேறு காரணங்களால் இந்த விமான சேவை 2015 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 200 பயணிகளை ஏற்றிய விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று அதிகாலை வந்தடைந்தது.
பிரான்ஸின் Charles de Gaulle சர்வதேச விமான நிலையத்திலிருந்து UL 564 விமானத்தினூடாக இலங்கை பிரஜைகளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இன்று நாட்டை வந்தடைந்தனர்.