துருக்கியில் இருந்து வந்த முதல் நேரடி விமானம்: வந்து குவியப்போகும் பயணிகள்
துருக்கிய ஏர்லைன்ஸ் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்ததுடன், முதலாவது விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதன்படி துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து துருக்கி விமான சேவையின் முதல் விமானமான TK-730 இன்று(30) காலை 05.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் இருந்து 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் மீண்டும் துருக்கி-இஸ்தான்புல் நோக்கி 209 பயணிகள் சென்றுள்ளனர்.
முழு வாரமும் சேவை
இந்நிலையில், சுமார் 10 வருடங்களாக துருக்கிய ஏர்லைன்ஸ் மாலைதீவு வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனது விமான சேவைகளை நடத்தி வருவதாகவும் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் துருக்கியிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல், துருக்கி மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகள் 08 மணிநேரம் எடுக்கும் மற்றும் ஒவ்வொரு வாரமும் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், இந்த விமானங்கள் துருக்கியிலிருந்து காலை 05.40 மணிக்கு வந்து காலை 07.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலுருந்து மீண்டும் திரும்பும்.
மேலும், 2024ஆம் ஆண்டு முதல் இந்த துருக்கிய விமான சேவைகள் வாரத்தின் 7 நாட்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளன.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 13 மணி நேரம் முன்