இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த உடன்பாடு : இந்தியா நழுவியது ஏன்..!
இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே எந்த வகையிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவோ அல்லது ஆதரிக்கவோ இடமளிக்கமாட்டோம் என இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தத்தை உருவாக்கவும், இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து காசா முனையில் உள்ள பலஸ்தீனியர்களைப் பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா உட்பட பல நாடுகள்
செப்டம்பர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பின் ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் விரும்பியபடி தாக்குதல் நடத்தலாம் என்று சுட்டிக்காட்டி அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.
ஜோர்தான் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உட்பட பல நாடுகள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையிலேயே, இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.