இஸ்ரேலின் விமான தாக்குதலில் காசாவில் மருத்துவமனை பணிப்பாளர் பலி
காசாவில் உள்ள அல்-வஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் மிதாத் மஹைசென் கொல்லப்பட்டதுடன் ஏனைய மருத்துவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலைவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மருத்துவமனை நல்வாழ்வு மற்றும் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கான புகலிடமாகும்.
மருத்துவமனைகள் மூடப்படும் சூழலில் நடத்தப்பட்ட தாக்குதல்
அல்-வஃபா மருத்துவமனை மீதான தாக்குதல் காசா பகுதி முழுவதும் பெரும்பாலான பாலஸ்தீனிய மருத்துவமனைகள் மூடப்படும் ஒரு பெரிய சூழலில் நடந்துள்ளது.
استشهاد مدير مستشفى الوفاء للمسنين في منطقة الزهراء الدكتور مدحت محيسن وإصابة أطباء آخرين بعد قصف تعرضت له المستشفى pic.twitter.com/5N3u1sOaHG
— Yasser (@Yasser_Gaza) November 17, 2023
இஸ்ரேலியப் படைகள் தற்போது மருத்துவர்களையும் நோயாளிகளையும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றன என்று காசாவின் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
12 ஆயிரம் பாலஸ்தீனர்கள் படுகொலை
அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேல் இதுவரை 5,000 குழந்தைகள் மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 12,000 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
According to the AWRAD poll, 100% of respondents said that there is no “safe space” in Gaza.https://t.co/Dtp4JnAOAo pic.twitter.com/j6kjcBtgfU
— The Palestine Chronicle (@PalestineChron) November 17, 2023