தமிழர் பகுதியில் அசுத்தமாக்கப்படும் பாடசாலை வீதி: மக்கள் விடுத்த கோரிக்கை
கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் கழிவு நீர் தேங்கி சூழலை மாசுபடுத்தி வருகின்ற நிலையில் அந்த பகுதியில் உள்ள அரச திணைக்களமும், கரைச்சி பிரதேச சபையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச திணைக்களம், அரச விடுதி மற்றும் தனிநபர்களால் பயன்படுத்தப்படும் கழிவு நீர் குறித்த வீதியில் தேங்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரவித்துள்ளனர்.
கரைச்சி பிரதேச சபை
இதேவேளை, அந்த பகுதியில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், நுளம்பு பெருக்கமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த பகுதிக்கு அருகில் மாணவர்களின் வகுப்பறைகளும், பாடசாலைக்கு செல்லும் வாயிலும் அமைந்துள்ளது.
இந்த நிலையில், துர்நாற்றம் மற்றும் நுளம்பினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அந்த வீதியால் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொறுப்புள்ள அரச திணைக்களமும், கரைச்சி பிரதேச சபையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |