தடம் மாறும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு: விமர்சனங்களுக்கு வழங்கப்பட்ட பதில்
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்கென்று ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக பொதுக்கட்டமைப்பு செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.
ஒற்றுமையாக விடயங்களை கையாளுவோம், ஒற்றுமையாக பொறுப்புக் கூறுவோம், கூட்டுப் பொறுப்பு என்றெல்லாம் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.இதனை மீறி பொதுக்கட்டமைப்பு செயற்பட முடியாது.
தமிழ் மக்கள் சார்ந்து ஒரு விடயத்தை முன்வைத்து வெளிப்படையாக ஊடக சந்திப்பை நடத்தி ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவு படுத்த வேண்டியதும் பொதுக் கட்டமைபின் கடமை.
தற்போது தமிழ் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்கான பிரச்சாரங்களை விடுத்து, வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் சென்று பேச்சுவார்த்தைகளில் பொதுக் கட்டமைப்பு ஈடுபட்டால், கட்டமைப்பின் மீதும் பொது வேட்பாளர் மீதும் தமிழ் மக்களுக்கு எவ்வாறு ஆதரவு இருக்கும்?
இவ்வாறொனதொரு பின்னணியில், பொதுவேட்பாளர் கட்டமைப்பு மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கின்றார் சிவில் செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |