தெற்கு அதிவேக வீதியில் நிகழ்ந்த அனர்த்தம்
srilanka
Accident
Colombo
By Vasanth
தேங்காய் எண்ணெய் ஏற்றிச் சென்ற பவுசர் தடம் புரண்டதில் சாரதியும் அவரது உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றையதினம் தெற்கு அதிவேக வீதியில் பண்டாரகம கொலமெதரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. 13 ஆயிரம் கிலோ தேங்காய் எண்ணெய் ஏற்றிச் சென்ற நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீதியில் தேங்காய் எண்ணெய் சிதறி காணப்பட்டது. காயமடைந்த சாரதியும் அவரது நடத்துனரும் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது உயர் அழுத்த தண்ணீர் பவுசர்களால் சிதறிய தேங்காய் எண்ணெய் கழுவி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்