வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு சலுகையுடன் காத்திருக்கும் வாய்ப்பு

Colombo Sri Lankan Peoples Prasanna Ranatunga Dollars
By Vanan Jan 25, 2023 11:27 AM GMT
Report

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான நடுத்தர வர்க்க வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயற்திட்டத்தின் ஊக்குவிப்பு சர்வதேச மட்டத்தில் ஆரம்பமாகிறது.

இலங்கையர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடைபெறும் சுதந்திர விழாக்கள் மற்றும் மாநாடுகளுக்கு இந்த ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

வீடுகளை டொலருக்கு விற்பனை செய்யும் திட்டம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு சலுகையுடன் காத்திருக்கும் வாய்ப்பு | Discount Lankan Migrant Workers Buy Houses Dollars

இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்டமாக, சுதந்திர தினத்துடன் இணைந்து டுபாயில் நடைபெறும் இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் சுதந்திர தினத்துடன் இணைந்து, துபாய் இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டம் பெப்ரவரி 11 ஆம் திகதி டுபாயில் உள்ள சப்ரீலில் நடைபெறவுள்ளதுடன், டுபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் 20,000க்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்கள் கொள்வனவு செய்வதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, முதலாவது வீடு வீடு கடந்த செப்டம்பர் மாதம் விற்கப்பட்டது. டுபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இந்த வருடம் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், கனடாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அவர் அதை 40,700 அமெரிக்க டொலருக்கு வாங்கினார், அதாவது நாட்டின் நாணயத்தில் சுமார் 15 மில்லியன் ரூபாய்.

தற்போது 11 வீடுகள் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வீடுகள் பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் வியத்புர வீடமைப்புத் தொகுதியில் அமைந்துள்ளது.

தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 2 படுக்கையறைகள் கொண்ட வீடுகள் முற்றாக விற்றுவிட்டது.

டுபாய், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஓமான் கட்டார் மற்றும் பிஜி தீவுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த வீடுகளை வாங்கியுள்ளனர்.

வீடுகளுக்குரிய பணத்தை மொத்தமாக செலுத்துவதால் 10 சதவீதம் விலைக்கழிவும் கிடைக்கும். மேலும் 5 வீடுகளை வாங்க வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டத்தின் கீழ் நடுத்தர வருமான வீடுகளை டொலருக்கு விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. அதன்படி ஈட்டியுள்ள தொகை 502,170.93 டொலர்களாகும். இது இலங்கை நாணயத்தில் 181.2 மில்லியன் ரூபாவாகும்.

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு சலுகையுடன் காத்திருக்கும் வாய்ப்பு | Discount Lankan Migrant Workers Buy Houses Dollars

கடந்த ஆண்டு டொலர்களில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 5 இலட்சம் டொலர்கள் ஆகும். கடந்த ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கை அடைந்து வெற்றி பெறப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் இவ்வருடம் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதே இலக்கு.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வந்த கொழும்பு ஹார்பர் வியூ ரெசிடன்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் அந்த வீட்டுத் திட்டமும் டொலர்களுக்கு வீடுகளை விற்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்படும்.

இங்கு 400 வீடுகள் உள்ளன. மற்றும் ஒவ்வொரு வீட்டின் அளவும் 500 சதுர அடி ஆகும். அந்த வீட்டை வாங்குவதற்கு டொலர்களில் செலுத்த வேண்டிய தொகை 40,000 டொலர்களாகும்.

வீடுகளை கொள்வனவு செய்வது எப்படி?

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு சலுகையுடன் காத்திருக்கும் வாய்ப்பு | Discount Lankan Migrant Workers Buy Houses Dollars

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இந்த வீடுகளை கொள்வனவு செய்ய முடியுமாக இலங்கை மத்திய வங்கியின் முன்மொழிவுக்கு ஏற்ப திறக்கப்படுகின்ற விஷேட கணக்கு ஒன்றாகிய உள்நோக்கிய முதலீட்டு கணக்குகளை (INWARD INVESTMENT ACCOUNT) திறப்பதன் ஊடாக செயற்படுத்தலாம்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.uda.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் மேலதிக தகவல்கள் மற்றும் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 077-7794016 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்” - என்றுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுத்துறை, வவுனியா, London, United Kingdom

29 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு

15 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

14 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, முதலியார்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், Kuliyapitiya, Heilbronn, Germany

15 Jan, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, மெல்போன், Australia

13 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, திருநெல்வேலி

14 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கனடா, Canada

14 Jan, 2015
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023