தேசிய மக்கள் சக்தியை சந்தித்த ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ
இலங்கைக்கு வருகைதந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ(Donald Lu) ஆகியோருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலொன்று நேற்று (13) காலிமுகத்திடல் (Galle Face) ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜுலிசங்கும் (Julie Chung) கலந்துகொண்டார்.
பொருளாதார நிலைமை
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து அதன் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், வசந்த சமரசிங்க மற்றும் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் நடப்பு பொருளாதார நிலைமை, சர்வதேச நாணய நிதியத்தின் இடையீடு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துதல் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |