டொனால்ட் லூவின் இலங்கை பயணம்: முன்னெடுக்கப்பட்ட முக்கிய சந்திப்புக்கள்!
இலங்கைக்கு (Sri Lanka) வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் (America) துணை இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்படி, அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சற்றுமுன்னர் அதிபர் செயலகத்தில் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கும் இந்த சந்திப்பின் போது அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை பயணம்
ஆசிய நாடுகளுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, கடந்த 10 ஆம் திகதி தனது ஐந்து நாள் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கான (India) பயணத்தை நேற்றைய தினம் (12) நிறைவு செய்து இன்று (13) இலங்கையை வந்தடைந்த அவரை, இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜுலி சங் (Juli Chung) வரவேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, டொனால்ட் லூ, அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன், குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachi), சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் (Ambika Satkunanathan) உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
சமாதானத்தை கட்டியெழுப்பல்
இதன் போது, இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவது மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், நல்லாட்சி, மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பில் இந்த சந்திப்பின் போது டொனால்ட் லூ மீண்டும் வலியுறுத்தியதாக ஜுலி சங் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தியை (V. Krishnamoorthy) தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் சந்தித்துள்ளார்.
வளர்ச்சிக்கான ஒத்துழைப்புக்கள்
இலங்கை மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இரண்டு நாட்டவர்களும் வழங்கும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவையும் (Aruni Wijewardane) டொனால்ட் லூ சந்தித்து பொருளாதாரம், பாதுகாப்பு, மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
.@State_SCA’s Assistant Secretary Lu and @MFA_SriLanka’s Foreign Secretary Aruni Wijewardane discussed economic, security, and governance issues ahead of the upcoming Bilateral Partnership Dialogue. We reiterated U.S. commitment to Sri Lanka to benefit the country’s long-term,… pic.twitter.com/ARe7DLiFiq
— Ambassador Julie Chung (@USAmbSL) May 13, 2024
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் (Sajith Premadasa) தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் இன்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
🇺🇲 @State_SCA Assistant Secretary of State for South and Central Asian Affairs, Donald Lu, met with 🇱🇰 Opposition Leader @sajithpremadasa, emphasizing collaboration to bolster relations and explore avenues for economic recovery. pic.twitter.com/ebG6Q53JH9
— Samagi Jana Balawegaya (@sjbsrilanka) May 13, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |