யாழில் சில பாடசாலைகளின் நேரத்தை மாற்ற நடவடிக்கை
Ministry of Education
Jaffna
Sri Lankan Schools
Education
By Thulsi
யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை (05) மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.
ஆசிரிய பற்றாக்குறை
குறித்த சந்திப்பில் நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய பற்றாக்குறை தொடர்பிலும், அவற்றினை நிவர்த்தி செய்வது தொடர்பில் புதிய ஆசிரிய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அதன்போது, படகுச் சேவையின் நேரத்தை கருத்தில் கொண்டு நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்

ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்