புகையிரத மின்சார ஊழியர்களுக்கும் முகாமையாளருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Beulah
புகையிரத மின்சார ஊழியர்களுக்கும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
புகையிரத கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் புகையிரத மின்சார ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மின்சார ஊழியர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் அவசர தொழில் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.
சிரமத்திற்குள்ளாகிய பயணிகள்

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அனைத்து புகையிரத பாதைகளிலும் புகையிரதம் தாமதம் ஏற்பட்டதோடு, அங்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது தொடர்பில் புகையிரத பொது முகாமையாளரை இன்று காலை புகையிரத மின் ஊழியர்கள் சந்திக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.