கொரோனா நோயாளியை ஏற்றிவந்த அம்புலன்ஸ் சாரதி மீது வைத்தியர் தாக்குதல்
doctor
assaults
ambulance driver
covid-patient
By Sumithiran
கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த சுவாசரிய அம்புலன்ஸ் சேவையின் சாரதி ஒருவரை கெக்கிராவ வைத்தியசாலையின் வைத்தியரும் சிற்றூழியர் ஒருவரும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து கெக்கிராவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அம்புலன்ஸ் சாரதி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
