அரசிற்கு அழுத்தம்...! வைத்தியர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
புதிய இணைப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்று காலை 08 மணி முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பணி புறக்கணிப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளதால், பணி புறக்கணிப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அரச மருத்துவர்கள் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த பணிபுறக்கணிப்பு போராட்டம் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பணிபுறக்கணிப்பு போராட்டம்
அந்த இணக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், எந்த நேரத்திலும் மீண்டும் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளார்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையான இடமாற்றம்
தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை (31) போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடமாற்ற முறைமை இன்று (30) நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் ஏற்படக்கூடிய சேவை முடக்கத்திற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்