வெளியானது 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!
Ministry of Education
Department of Examinations Sri Lanka
By Dharu
புதிய இணைப்பு
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

முதலாம் இணைப்பு
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று (02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான முடிவுகளை doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாகப் பார்த்துக் கொள்ளலாம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி