ஆட்டம் காண்கிறதா மோடியின் சாம்ராஜ்ஜியம் : தேர்தல் முடிவுகள் பறைசாற்றுவது என்ன..!
இந்திய மக்களை தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் இதுநாள்வரை எழுச்சி கண்ட பாஜகவின் சாம்ராஜியம் சரிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு தொடங்கி, கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேர்தல் வரை ஒற்றை இலக்கத்தில் தொடங்கி மூன்று இலக்கம் வரை மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி கணிசமாக அதிகரித்த வண்ணம் இருந்தது.
பொய்த்துப் போன கருத்து கணிப்புகள்
1991ம் ஆண்டில் 120 தொகுதிகள், 1996ல் 161 தொகுதிகள், 1998ல் 182 தொகுதிகள் என்று தொடங்கி, 2014ம் ஆண்டு 282 இடங்களிலும் 2019ம் ஆண்டில் 303 இடங்களிலும் வென்றது பாஜக கூட்டணி.
இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தலைவர்களும், வெற்றிபெறும் இடங்கள் 400 ஐ தாண்டும் என்று கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன.
எதிர்க்கட்சிகள் வலிமையான கூட்டணி
ஆனால், இப்போதுவரை 290 என்ற அளவிலேயே பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. வெற்றிக்கு 272 இடங்கள் போதும் எனினும் பாஜகவின் மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத இறங்கு முகம், இந்த தேர்தலில் காணப்படுகிறது தெரிகிறது.
எதிர்க்கட்சிகள் இணைந்து வலிமையான கூட்டணி அமைத்ததும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதுவரை பாஜக 237 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் தெலுங்கு தேசம், ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்ற இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
கடந்த தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக தனியே வென்ற நிலையில், இந்த முறை அதற்கும் இழுபறி நீடித்து வருகிறது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியமைக்க வேண்டும் என்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியுள்ளதா எனற கேள்வி எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |