கண்டியில் வடிகாலில் சிக்கிய நாய்:24 மணிநேர தவிப்பு:பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு அதிகாரிகள்
Kandy
Sri Lanka
Srilankan Tamil News
By Sindu
கண்டி, கட்டுகெலே, சனல் சென்டர் கட்டடத்துக்கு அருகிலுள்ள கட்டடம் ஒன்றினுள் அமைந்துள்ள சிறிய வடிகாலில் நாயொன்று சிக்குண்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
ஒரு நாளுக்கும் மேலாகச் சிக்கியிருந்த நாய் ஒன்றை, பெரும் முயற்சியின் பின்னர் நேற்று (16) கண்டி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இதனை அடுத்து, குறித்த நாய் பேராதனை கால்நடை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பாராட்டுக்கள்
ஒரு பிராணியாக இருந்தாலும் அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பெரும் முயற்சி மேற்கொண்ட அதிகாரிகளின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் கட்டடத்துக்கு ஏற்படக்கூடிய சேதங்களைப் பொருட்படுத்தாமல் நாயை மீட்பதற்கு அனுமதியளித்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |