நான்கே மாதங்களில் டொலர் முதலீட்டு இலக்கை அடைந்த இலங்கை
2024ஆம் ஆண்டிற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு இலக்கை (Sri Lanka) இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே இலங்கை முதலீட்டுச் சபை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதலீட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் தமது வர்த்தகத்தை தொடர்வதற்காக நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அதானி நிறுவனம் ஏற்கனவே முதலீட்டு சபையுடன் 820 மில்லியன் டொலர் முதலீட்டிற்கும் ஏனைய வர்த்தக நிறுவனங்களுடன் 320 மில்லியன் டொலர்களுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் கையிருப்பு
இந்நிலையில், இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Asanka Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |