வங்கிகளில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Commercial Bank
Exchange Rate
People's Bank
By Kathirpriya
நேற்றைய தினத்துடன் (14) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.91 ரூபாயிலிருந்து 315.69 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 331.14 ரூபாயிலிருந்து 329.87 ரூபாய் ஆகவும் குறைவடைந்துள்ளது.
கொள்முதல் பெறுமதிகள்
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.68 ரூபாயிலிருந்து 316.21 ரூபாயாக குறைவடைந்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 328 ரூபாயிலிருந்து 327.50 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 329 ரூபாயிலிருந்து 328 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்