டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் : இன்றைய நாணய மாற்று வீதம்
நேற்றைய தினத்துடன் (20) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (21) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.15 ரூபாயாக மாறாமலுள்ள வேளை விற்பனைப் பெறுமதி 331.40 ரூபாயிலிருந்து 330.39 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது.
விற்பனைப் பெறுமதி
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.18 ரூபாயிலிருந்து 318.67 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 328.50 ரூபாயிலிருந்து 329 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது
அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாய் மற்றும் 329 ரூபாயாக மாற்றமடையாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 90 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 90 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 392 ரூபா 15 சதம் - விற்பனை பெறுமதி 408 ரூபா 28 சதம்.
கனடா டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 75 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 07 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 02 சதம் - விற்பனைப் பெறுமதி 246 ரூபா 33 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 99 சதம் - விற்பனைப் பெறுமதி 213 ரூபா 73 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 98 சதம் - விற்பனைப் பெறுமதி 242 ரூபா 93 சதம்.