டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நாணயமாற்று விகிதம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாகவுள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 313.37 ரூபாய் முதல் 313.85 ரூபாய் மற்றும் 328.78 ரூபாய் முதல் 329.29 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.74 ரூபாயாவும், விற்பனைப் பெறுமதி 326 ரூபாயாகவும் மாற்றமடையாமல் உள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 315 ரூபாய் மற்றும் 327 ரூபாயாக மாற்றமடையாமல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 78 சதம் - விற்பனை பெறுமதி 327 ரூபா 87 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபா 26 சதம் - விற்பனை பெறுமதி 417 ரூபா 96 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 81 சதம் - விற்பனை பெறுமதி 357 ரூபா 71 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 82 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 35 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 37சதம் - விற்பனை பெறுமதி 210 ரூபா 83 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 03 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 08 சதம்