பாணில் நத்தை! "ஒன்றும் செய்ய முடியாது" என பதில்
Warning
People
Sri lanka
By Shalini
இங்கிரிய பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பாணுக்குள் நத்தை ஒன்று காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்யும் வாகனத்தில் வாங்கப்பட்ட பாணிலேயே நத்தை ஒன்று காணப்பட்டுள்ளது.
பாண் கொள்வனவு செய்த நபர் இது தொடர்பில் வாகனத்தில் இருந்த விற்பனையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு ஒன்றும் செய்ய முடியாதென அவர்கள் பதிலளித்துள்ளதாக பாண் கொள்வனவு செய்தவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது