முடிவுக்கு வரும் ஈரான் மீதான போர்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான போர் தற்போது முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய ட்ரம்ப், நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் படை
அமெரிக்கப் படைகளின் இலக்குகள் எட்டப்பட்டு வருவதாகவும் ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், தொடர்ந்து நடைபெற்றுவரும் சண்டைகள் மிக விரைவில் முடிவடையும் என்று தான் எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், இந்தப் போர் எப்போது முழுமையாக நிறைவடையும் என்பது குறித்த ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்