எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் - அரசாங்கம் கூறியுள்ள தகவல்
Sri Lankan Peoples
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Vanan
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை
நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் வந்தாலும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்
இதேவேளை, முதல் தொகுதி டீசல் நாட்டுக்கு கிடைத்துள்ள நிலையில், பெறப்பட்ட டீசல் கையிருப்பின் தரம் தற்போது சரிபார்க்கப்படுகிறது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் விநியோகஸ்தர்கள் இருவரும் இன்று தேசிய எரிபொருள் உரிமத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்