P2P போராட்டம்! மீண்டும் சிறீதரன் எம்.பியை துருவிய மன்னார் பொலிஸார்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரைக்குமான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் மன்னார் பொலிஸார் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று காலை குறித்த வாக்கமூலத்தினை பதிவு செய்துள்ளனர். கடந்த கடந்த மாதம் 3ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணி பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பொலிகண்டியில் நிறைவு பெற்றுள்ளது.
மன்னார் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மன்னார் பொலிஸாரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.