தமிழ் தேசியம் சார்ந்து செயற்பட தடையாக விளங்கும் டக்ளஸ் தரப்பு: முற்றாக விலகுவதாக அறிவித்த உறுப்பினர்! (காணொளி)
Sri Lankan Tamils
Tamils
By pavan
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபன் கட்சியில் இருந்து விலகிகொண்டதாக தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தமிழ் தேசியம்
தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுவதற்கும் மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்துவதற்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தடையாக இருப்பதால் அக்கட்சியில் இருந்து முற்றுமுழுதாக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் காலங்களில் இருந்து தமிழ்த்தேசியம் சார்ந்து செயற்படுவேன் எனவும் கூறியுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி