யாழ் நகரப் பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்
Sinhala and Tamil New Year
Jaffna
Douglas Devananda
By Sathangani
யாழ் நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) மேற்கொண்டிருந்தார்.
புது வருடப் பிறப்பு தினமான இன்று (14) காலை குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
யாழ் நகரின் தூய்மை பராமரிப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்கள பலதரப்பட்டவர்களிடமிருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தூய்மையாக்குவது குறித்து அவதானம்
இந்த நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த கள விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் நகரின் மையப்பகுதி, புதிய மாநகரசபை கட்டட வளாகம் மற்றும் அதனை அண்டிய சுற்றுவட்டத்தின் நீர் வடிந்தோடும் வடிகால்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அமைச்சர் அவற்றை தூய்மையாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்