தமிழர் பகுதியில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தி: ஏற்றுமதி விருத்திக்கு டக்ளஸ் நடவடிக்கை
கிளிநொச்சி (Kilinochchi) அக்ரோ ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) நேரில் சென்று அதன் உற்பத்தி செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
வடமாகாணத்தில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கபட்டுக் கொண்டிருக்கும் ‘லங்காஜம்போ’ நிலக்கடலை உற்பத்தி செயற்கையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமன்றி இந்த செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வத்தை தூண்ட வேண்டிய பொறுப்புகள் அனைவரிடமும் உள்ளது.
ஜம்போ நிலக்கடலை உற்பத்தி
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தியில் ஏற்றுமதி இல்லாமையால் அவதியுரும் நிலையில் காணப்பட்டது.
இதனையறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளும் செய்து சுயதொழில் முயற்சிகள் விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தி அதை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளார்.
விருத்தி செய்வதற்கான நடவடிக்கை
இதேவேளை, சுய தொழில் முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்காகவும் பல்வேறு முயற்சிகள் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், குறித்த ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக மேம்பாடுகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |