நாயை மீட்க கிணற்றில் இறங்கியவர் பலியான துயரம் - கிளிநொச்சியில் சம்பவம்
Jaffna
Kilinochchi
By Vanan
யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகர்களில் ஒருவரான விவேகானந்தனின் மகன் வேணிலவன் தமது வீட்டு செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கியபோது சேற்றில் சிக்கி பலியாகிய துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
சேற்றில் புதைந்த நிலையில் மரணம்

வீட்டு நாய் கிணற்றில் விழுந்ததையடுத்த அதனை மீட்பதற்காக வலிமை குறைந்த கயிற்றின் உதவியுடன் இறங்கிய போது, கயிறு அறுந்ததால் கிணற்றில் விழுந்த அவர் சேற்றில் புதைந்த நிலையில் மரணித்துள்ளர்.
தனது மகனை நீண்டநேரமாக காணாத தந்தை அவரைத் தேடியபோதே இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் இன்று உதயநகர் பகுதி சோகத்தில்
மூழ்கியிருந்தது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி