பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு முயற்சி: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட அதிர்ச்சி காணொளி
ஒரு சில இடை அதிகாரிகள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தம் காரணமாக தன்னை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Peradeniya) மாற்றுவதற்கு முயற்சி செய்வதாக வைத்தியர் அரச்சுனா (Dr.Archuna) குறிப்பிட்டுள்ளார்.
அவரது தனிப்பட்ட முகநூல் கணக்கில் காணொளி பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்காக கடிதம் ஏதும் வழங்கப்பட்டால், குறித்த கடிதத்துடன் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் முடிவில் தன்னில் பிழை இல்லை என்று நிரூபிக்கப்பட்டால் தாம் மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |