கொவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
corona
sri lanka
people
By Shalini
கொவிஷீல்ட் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு 16 வாரங்களின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் சதவிகிதத்தில் மாற்றம் இல்லாத போதிலும், நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் 26 சதவிகிதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரம் செலுத்திக் கொண்டவர்களுக்கு 93.4 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாகவும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் (developed neutralizing antibodies) 97.1 சதவிகிதமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி