சாரதி அனுமதிப்பத்திரம் ஆயுதமாக மாறியதா.... காவல்துறை மிரட்டல் : சிறீதரன் எம்.பி எச்சரிக்கை
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்தார்.
ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை அடக்குமுறையாக காவல்துறையினரை வைத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தையிட்டியில் இன்று (03) இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக இன்று இந்த போராட்டத்திற்கு வந்த மக்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டார்கள். அடையாள அட்டையை கொடுக்கும் போது சாரதி அனுமதிப்பத்திரத்தை தருமாறு கோரி அதனை வைத்து பதிவு செய்தார்கள்.
அதற்கான காரணம் அவர்கள் வாகனங்களை செலுத்தும் போது தாக்கப்படுதல் அல்லது கைது செய்யும் நோக்கத்திற்காகவே ஆகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |