கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிய குற்றச்சாட்டு : நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் கைது...!
கிளிநொச்சியில் (Kilinochchi) மணல் அகழ்விற்கு அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்லாறு பகுதியில் நேற்று (5) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
வீதிச் சோதனை மூலம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மீட்கப்பட்ட தடையப் பொருட்கள் எதிர்வரும் (10) ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |